Saturday, 3 October 2015

மரவள்ளி  சாகுபடி தொழில்நுட்பங்கள் :

 மரவள்ளி சாகுபடியில் அதிக லாபம் பெற கீழ்கண்ட தொழில்நுட்பங்களை கடைபிடிக்கவேண்டும் .
விதைக்கரணை  தேர்வு :
                    நோய் தாக்காத மையப்பகுதியிலிருந்து 15 செ.மீ. நீளம் 8 செ.மீ .பருமன் உள்ள குச்சிகள் .
மரவள்ளி நாற்றங்கால் :
                    மேட்டுப்பாத்திகளில்  5-7 செ .மீ.வரிசைக்கு வரிசை ,செடிக்கு செடி இடைவெளி இருக்குமாறு  கரணைகளை நடவேண்டும் .விதைக்கரணைகள்  ஊன்றிய  7 நாட்களில் முளைக்க ஆரம்பிக்கும் 15 - 20 நாட்களில் வயலில் நட்டுவிடவேண்டும் .விதைக்கரனைகள்  முளைவிட்டதும்  தேமல் நோயின் அறிகுறிகள் தென்பட்டால்  அத்தகைய செடிகளை களைந்து நல்ல கரணைகளை  நடவு செய்யவேண்டும் .நாற்றங்கால் அமைப்பதினால் கீழ்கண்ட நன்மைகளை பெறலாம் .
        1. தரமான விதக்கரனைகளை பெறலாம் .
         2. தேமல் நோய் தாக்கிய கரணைகளை  ஆரபம்பத்திலேயே  கண்டறிந்து நீக்கலாம்
       3. வயலில்  சரியான செடிகளின் எண்ணிக்கை
       4. ஒருமுறை களை  எடுக்கும் செலவும் . இருமுறை நீர்பாசனம் செய்யும் செலவும் குறையும் .
             ஒரு ஏக்கரில் பயிரிட  16 சதுர மீட்டர்  நாற்றங்கால் போதுமானது.
விதைகரணை  நேர்த்தி :
        விதைக்கரனைகளின்  அடிப்பாகத்தை கார்பண்டாசிம்  என்ற மருந்து 1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் கலந்து 15 நிமிடம் நனைத்து  பின் நடவேண்டும் . ஒரு ஏக்கரில் நடவுசெய்ய 80-120 கிராம் மருந்து தேவைப்படும் .
       வறட்சியை  தாங்கி வளர :
                 மானாவாரியில் பயிரிடப்படும் மரவள்ளி பயிர் வறட்சியை தாங்கி வளர  1 லிட்டர் தண்ணீரில் 5 கிராம் பொட்டாசியம் குளோரைடு  என்ற விகிதத்தில் கலந்த கரைசலில் காரணிகளை சுமார் 20 நிமிடங்கள் நனைத்து பின் நடவேண்டும் .
        அதிக அளவில் கிழங்கு பிடிக்க :
                ஒரு  ஏக்கரில் நடவு செய்ய தேவையான கரணைகளை 30 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம் மற்றும் 30 கிலோ செம்மண்ணை 60 லிட்டர் தண்ணீ ரில் கலந்து அக்குழம்பில் கரணைகளின்  5 செ .மீ . அளவு நனைத்து நடவேண்டும் .
    


ஏக்கருக்கு  தேவையான விதைக்கரணைகள் :

கிளைக்கும் தன்மையுள்ள ரகம்
   மானாவாரி   - இடைவெளி 75*75 செ .மீ.-- 7111 எண்கள்
   இறவை   --    60*60  செ  .மீ.  --  11111 எண்கள்
கிளைக்கும் தன்மை குறைவாக உள்ள ரகம்
 மானாவாரி   - இடைவெளி 90*90 செ .மீ.-- 4938 எண்கள்
   இறவை   --    90*75  செ  .மீ.  --  5925 எண்கள்