Saturday, 7 November 2015

தர்பூசணி  சாகுபடியில் கவனத்தில் கொள்ளவேண்டியவை :

                          ஏற்ற  பருவம்  : நவம்பர்- டிசம்பர்
                         விதைநேர்த்தி  : ஒரு கிலோ விதைக்கு 4கிராம் டிரைகோடெர்மா விரிடி கலந்து  விதைநேர்த்தி   செய்யவேண்டும் .
                    ஒரு எக்டருக்கு  3.5 கிலோ விதை தேவைப்படும். குழிதட்டுமுறையில்  நாற்றுகள் உற்பத்தி  செய்து நடுவதால்  வயலில் முழு அளவில் செடிகளை பராமரிக்கலாம் .12 நாட்கள் வயதுடைய நாற்றுகளை  வரிசைககுவரிசை 2.5மீட்டர் செடிக்குசெடி 0.9மீட்டர் இடைவெளி பார்களில் நடவுசெய்யலாம் .
                      அடியுரம் : தொழுஉரம் -20டன்கள் .,வெப்பம்புண்ணாக்கு 100கிலோ,அசொஸ்பிரில்லம் -2கிலோ ,பாஸ்போபேக்டிரியா -2கிலோ , சூடொமொனாஸ் -2.5கிலோ ஒரு எக்டருக்கு  கடைசி உழவுக்குமுன்   இடவேண்டும்.
                         சூப்பர் 340கிலோ,பொட்டா க்ஷ் 94கிலோ அடிஉரமாக இடவேண்டும் .மேலுரமாக 120கிலோ யூரியா  இடவேண்டும்.
                        எத்திரல் 10 லிட்டர் தண்ணீருக்கு 2.5மில்லி என்ற   விகிதத்தில் கலந்து விதைத்த 15ம் நாளிலிருந்து வாரம் ஒரு முறை வீதம் 4முறை தெளிக்கவேண்டும் .
              பழ ஈ : 20*15சே.மீ  அளவுள்ள  பாலித்தீன் பையில் 5கிலோ நனைத்த கருவாட்டுடன் ஒரு பஞ்சில் 1 மிலி டைகுலோர்வாஸ் மருந்தை நனைத்து  பொறியாக வயலில் ஆங்காங்கே வைக்கவேண்டும். ஒரு எக்டருக்கு 50பொறிகள் தேவைப்படும் .
மகசூல் : எக்டருக்கு 120 நாட்களில் 25-30டன்கள்