Tuesday, 14 April 2015

     கருணைக்கிழங்கு --
ஏற்ற  மண் வகை   :வடிகால் வசதி உள்ள மணல் கலந்த இருமண்பாட்டு நிலம்  PH  5.5 --7
பருவம்                       : ஏப்ரல்  -- மே
விதை                        கருணைக்கிழங்கை  8 - 10  சிறிய துண்டுகளாக வெட்டி பயன்படுத்தலாம். ஒவ்வொரு துண்டிலும்  தாய் கிழங்கின்   குருத்தின் சிறியபகுதி  இருக்குமாறு வெட்டி எடுக்கவேண்டும்
நிலம் தயாரிப்பு }நன்கு உழுது  .ஏக்கருக்கு 10 டன்  தொழு உரம் போடவே ண்டும்.  தேவை ப்படும் அளவுகளில் பாத்திகள் அமைக்கவேண்டும்
இடைவெளி  " 45*90 செ .மீ ,இடைவெளியில்  குருத்துபகுதி மேல்நோக்கி இருக்குமாறு   ஊ ன்ற  வேண்டும் ,வாரம் ஒருமுறை நீர்பாய்ச்சவேண்டும் / ஒரு மாதத்தில் முளைத்து வரும். ஏ க்கருக்கு  1400கிலோ கிழங்கு  தேவைப்படும் .
உரமிடுதல்  " விதைத்த  45ம் நாள் களையெடுத்து ஏக்கருக்கு  யூ ரியா 35கிலோ சூப்பர் 150கிலோ பொட்டாஷ் 34கிலோ  இடவேண்டும் .மேலுரமாக 75ம் நாள்    யூ ரியா 35கிலோ  பொட்டாஷ் 34கிலோ  இடவேண்டும் .

 நோய். பூ ச் சி அதிகம்  தாக்குதல் இல்லை
மகசூல்  > ஏக்கருக்கு 12 -15 டன்கள்  240 நாட்களில்
வீட்டுத்தோட்டங்களில்    கருணைக்கிழங்கு -- குருத்துப்பகுதியை  சிறிது கிழங்குடன் வெட்டி எடுத்து  குருத்துப்பகுதி மேல்நோக்கி இருக்குமாறு ஊன்றவேண்டும் .8 மாதங்களில்  பெரிய கருணைக்கிழங்கு கிடைக்கும் .தொட்டிகளிலும் வளர்க்கலாம் 

No comments:

Post a Comment