Saturday, 25 April 2015

பனைமரங்களை  பேணிக்காப்போம் :

                              பனைமரம்  தமிழ்நாட்டின்  மாநில மரமாகும் . மரத்தின் அனைத்து பாகங்களும்  பயன்படுத்தப்படுகிறது. 800 க்கும் மேற்பட்ட விதங்களில் மரத்தின்  அனைத்து பாகங்களும் பயன்படுத்தப்படுவதால்  பனைமரத்தை கற்பகவிருட்சம்  என்று சொன்னால் மிகையாகாது .
                            நமது முன்னோர்கள் பனைமரத்தை நீர் ஆதாரங்களை பராமரிக்கவும், மேம்படுத்தவும் பயன்படுத்தினர். ஆறு மற்றும் ஏரிக்கரை  ஓரங்களில் நட்டு வைத்தனர். மற்ற மரங்களைப்போல்  இல்லாமல்  பனைமரத்தின்  வேர்கள்  கீழ்நோக்கி  செல்லும்  நிலத்தடிநீர்  வேர்ப்பாதை வழியே மேல்நோக்கி  வருவதால் இயற்கையானமுறையில்  நீர்சுழற்சி ஏற்பட்டது. இதனால்  நீர்நிலைகள்  கோடை காலங்களிலும் வற்றாமல்  இருந்தது .
                           தற்போது அழிந்துவரும்  நிலையில் உள்ள பனைமரங்களை  பேணிக்காப்போம்




                      

No comments:

Post a Comment