Saturday, 28 March 2015

1  ஏக்கர்  3 மாதங்கள்  நிகர வருமானம்  1 லட்சம் :
           சின்ன வெங்காயம் -- சாகுபடி குறிப்புகள்
மண்ணின் தன்மை  : நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் மற்றும்  மணற்பாங்கான செம்மண் .
 மண்ணின் கார அமில தன்மை  : 6 --7
ஏற்ற பருவம் : ஏப்ரல் -மே  ( வைகாசி  பட்டம் )
விதை அளவு : கோ 5 ரகமானால்   ஏக்கருக்கு 1.5கிலோ மேட்டுப்பாத்தி அல்லது குழித்தட்டு முறையில் நாற்றுகளை  உற்பத்தி செய்து 30-35 நாட்களில்  பிடுங்கி நடவேண்டும். இதர ரகமாயின் ஏக்கருக்கு 600 கிலோ வெங்காயப் பற்கள்  .
வயல் தயாரிப்பு : நன்கு  உழுது 45செ .மீ  இடைவெளியில் பார்கள் அமைத்து பாரின் இருபுறமும் 10 செ .மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும் .
 உரமிடுதல் : ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் , அசொஸ்பைரில்லம் 800கிராம், பாஸ்போபாக்டீரியா 800கிராம், சுடோமொனாஸ்  1 கிலோ கலந்து இடவேண்டும் . ஏக்கருக்கு  யூரியா 26கிலோ. சூபர் பாஸ்பேட் 150கிலோ பொட்டாஷ் 20கிலோ  அடியுரமாகவும்
        விதைத்த 30ம் நாள்   யூரியா 26கிலோ    மேலுரமாக இடவேண்டும் .
 நீர் பாய்ச்சுதல் :நடும்போது, நட்ட 3ம் நாள் பிறகு வாரம் ஒருமுறை
பயிர் பாதுகாப்பு :
  இலைப்பே ன்  : புரப்பநோபாஸ் 2மிலி/லிட்டர்

இயற்கைமுறையில்  கட்டுப்படுத்த : வேப்பங்கொட்டை சாறு 10 மிலி/லிட்டர்
 மகசூல் : ஏக்கருக்கு  7 டன்கள் .
 வரவு  செலவு கணக்கு :
 வயல்தயாரிப்பு       :  2000                                                                                                இயற்கை உரம்                :9000
 ரசாயண உரம்          :6000
விதை                           :4000
பயிர்பாதுகாப்பு :        1500
அறுவடை, களையெடுப்பு, : 15000
ஆட்கூலி

ஆகமொத்தம்   அதிகபட்சம்       : 40000

வரவு  கிலோ 20  ரூபாய் வீதம்  7000*20  =  140000
   செலவு                                                             =     40000

நிகர  லாபம்                                                      =  100000

விவசாயி   :  தேவராஜுலு  தொடர்பு  கைபேசி  எண்  9843296321





Friday, 27 March 2015

வெண்டைபயிரில்  மஞ்சள் நரம்புநோய்  மிகப்பெரிய பிரச்சினையாக விவசாயிகளால் எதிர்நோக்கப்படுகிறது. இது ஒரு வைரஸ்நோய் .இளம்பயிரில் பாதிப்பு ஏ ற்பட்டால்  பெரியஅளவில் மசூல் இழப்பு ஏ ற்படும்.
 இயற்கை முறையில்  நோயை  பரப்பும் வெள்ளை ஈக்களை  மஞ்சள் ஓட்டும் அட்டை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் . ஒரு மஞ்சள் நிற டின்  அல்லது அட்டையில்  விளக்கெண்ணெய்  தடவி வயலில்  ஆங்காங்கே  வைக்கவேண்டும். தினமும் அதில்  ஓட்டும் வெள்ளை ஈக்களை  சேகரித்து அழிக்கவேண்டும்.. மீண்டும் அதே அட்டையில் விளக்கெண்ணெய்  தடவி பயன்படுத்தலாம் 



Wednesday, 18 March 2015

பஞ்சகாவ்யா  :
                            பயிர்களுக்கு   தேவையான  அனைத்து சத்துக்கள்  மற்றும்  வளர்ச்சி ஊக்கிகள்  அதிக அளவில் உள்ள  நல்ல உயிர்  உரம். இது 75% உரமாகவும்,25% பூச்சி  மருந்தாகவும்  வேலைசெய்கிறது .
                           பயன்படுத்தும்போது   விளைச்சல் அதிகரிக்கிறது . நோய்,பூச்சி தாக்குதல் இல்லை.  அதிக சுவையுள்ள விளைபொருட்கள் . பூக்கள்  அதிக மணத்துடன் நீண்ட நேரம் வாடாமல் இருக்கும்.



தயாரிக்கும் முறை :

1. பசு  சாணம்                                                  :5 கிலோ
2. பசுமாட்டு   சிறுநீர்                                    : 3 லிட்டர்
3.பசுமாட்டு  பால்                                          : 2 லிட்டர்
4.பசுமாட்டு  தயிர் (புளித்தது)                  : 2 லிட்டர்
5. பசுமாட்டு  நெய்                                         :1 லிட்டர்
6.கரும்புச்சாறு (அ )                                      : 3 லிட்டர்    
  நாட்டு சர்க்கரை 1/2 கிலோ 3லிட்டர் நீரில் கரைத்துக்கொள்ளவும்
7. இளநீர்                                                            :3 லிட்டர்  
8.வாழைப்பழங்கள்                                      : 12
9.கள்                                                                    :2 லிட்டர்
                                                        ஒரு  பிளாஸ்டிக்  வாளியில்  சாணி மற்றும்  நெய்யை  பிசைந்து  3  நாட்கள்  வைக்கவும். நான்காம் நாள்   வாயகன்ற  சிமெண்ட் தொட்டி (அ ) பானையில்  அனைத்து  பொருட்களுடன்  போட்டு  நன்கு கரைத்து  கலக்கி  துணியால் மூடி  நிழலில்  வைக்கவும் . தினமும்  அடிக்கடி  கலக்கி வரவும். 15 நாட்களில்   பஞ்சகாவ்யா  தயாராகிவிடும்.  இதை  6 மாதம் வரை தினமும் கலக்கிவிட்டு பயன்படுத்தலாம் .
 பயன்படுத்தும்  முறை :
                     100 லிட்டர்  நீருக்கு  3 லிட்டர்   பஞ்சகாவ்யா  என்ற  விகிதத்தில் கலந்து  தெளிக்கலாம் .







Thursday, 12 March 2015


 மாமரங்களில்  ப்லாநோபிக்ஸ் என்ற பெயரில் சந்தையில் கிடைக்கும்  என்.எ.எ .  என்ற பயிர் வளர்ச்சி ஊக்கியை  4.5லிட்டர்  தண்ணீருக்கு  1 மிலி  என்ற விகிதத்தில் கலந்து  பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் பின்னர் பிஞ்சுகள் பட்டாணி  அளவில் உள்ள்ளபோது  ஒருமுறையும் என  இரண்டு முறைகள்  காலை  அல்லது மாலை வேளைகளில் தெளிப்பதால்  பூ , பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு  காய்பிடிப்பு  அதிகரிக்கும்