Saturday, 19 December 2015

பரங்கி  :
                பரங்கி செடியில்  அயல்மகரந்த சேர்க்கை  செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.ஆண்  பூவில் உள்ள  மகரந்தத்தை பெண் பூவில் சேர்க்கவேண்டும்.மறுநாள்  பெண் பூ வாடிவிடும். ஐந்தாம்  நாள் பிஞ்சு தோன்றுவதை காணலாம். மகரந்தசேர்க்கையை  காலை வேளையில் செய்வது நல்லது .
                   Hand pollination is effective in Pumpkin. Identify male and female flowers as shown in picture.
Remove the stamen from the middle of male flower. some small dust come off. rub the stamen in all parts of the inside of female flower. Fruits starts to grow within five days




picture 1  male flower
picture  2&3  female flower
picture 4  hand pollination
Rub the stamen on all parts of the inside of the female flower. If you like, you can leave the stamen inside the flower. The hand pollinatio

Read more : http://www.ehow.com/how_5451521_pollinate-pumpkin-hand.html
Rub the stamen on all parts of the inside of the female flower. If you like, you can leave the stamen inside the flower. The hand pollinatio

Read more : http://www.ehow.com/how_5451521_pollinate-pumpkin-hand.html

Saturday, 7 November 2015

தர்பூசணி  சாகுபடியில் கவனத்தில் கொள்ளவேண்டியவை :

                          ஏற்ற  பருவம்  : நவம்பர்- டிசம்பர்
                         விதைநேர்த்தி  : ஒரு கிலோ விதைக்கு 4கிராம் டிரைகோடெர்மா விரிடி கலந்து  விதைநேர்த்தி   செய்யவேண்டும் .
                    ஒரு எக்டருக்கு  3.5 கிலோ விதை தேவைப்படும். குழிதட்டுமுறையில்  நாற்றுகள் உற்பத்தி  செய்து நடுவதால்  வயலில் முழு அளவில் செடிகளை பராமரிக்கலாம் .12 நாட்கள் வயதுடைய நாற்றுகளை  வரிசைககுவரிசை 2.5மீட்டர் செடிக்குசெடி 0.9மீட்டர் இடைவெளி பார்களில் நடவுசெய்யலாம் .
                      அடியுரம் : தொழுஉரம் -20டன்கள் .,வெப்பம்புண்ணாக்கு 100கிலோ,அசொஸ்பிரில்லம் -2கிலோ ,பாஸ்போபேக்டிரியா -2கிலோ , சூடொமொனாஸ் -2.5கிலோ ஒரு எக்டருக்கு  கடைசி உழவுக்குமுன்   இடவேண்டும்.
                         சூப்பர் 340கிலோ,பொட்டா க்ஷ் 94கிலோ அடிஉரமாக இடவேண்டும் .மேலுரமாக 120கிலோ யூரியா  இடவேண்டும்.
                        எத்திரல் 10 லிட்டர் தண்ணீருக்கு 2.5மில்லி என்ற   விகிதத்தில் கலந்து விதைத்த 15ம் நாளிலிருந்து வாரம் ஒரு முறை வீதம் 4முறை தெளிக்கவேண்டும் .
              பழ ஈ : 20*15சே.மீ  அளவுள்ள  பாலித்தீன் பையில் 5கிலோ நனைத்த கருவாட்டுடன் ஒரு பஞ்சில் 1 மிலி டைகுலோர்வாஸ் மருந்தை நனைத்து  பொறியாக வயலில் ஆங்காங்கே வைக்கவேண்டும். ஒரு எக்டருக்கு 50பொறிகள் தேவைப்படும் .
மகசூல் : எக்டருக்கு 120 நாட்களில் 25-30டன்கள்



 

Saturday, 3 October 2015

மரவள்ளி  சாகுபடி தொழில்நுட்பங்கள் :

 மரவள்ளி சாகுபடியில் அதிக லாபம் பெற கீழ்கண்ட தொழில்நுட்பங்களை கடைபிடிக்கவேண்டும் .
விதைக்கரணை  தேர்வு :
                    நோய் தாக்காத மையப்பகுதியிலிருந்து 15 செ.மீ. நீளம் 8 செ.மீ .பருமன் உள்ள குச்சிகள் .
மரவள்ளி நாற்றங்கால் :
                    மேட்டுப்பாத்திகளில்  5-7 செ .மீ.வரிசைக்கு வரிசை ,செடிக்கு செடி இடைவெளி இருக்குமாறு  கரணைகளை நடவேண்டும் .விதைக்கரணைகள்  ஊன்றிய  7 நாட்களில் முளைக்க ஆரம்பிக்கும் 15 - 20 நாட்களில் வயலில் நட்டுவிடவேண்டும் .விதைக்கரனைகள்  முளைவிட்டதும்  தேமல் நோயின் அறிகுறிகள் தென்பட்டால்  அத்தகைய செடிகளை களைந்து நல்ல கரணைகளை  நடவு செய்யவேண்டும் .நாற்றங்கால் அமைப்பதினால் கீழ்கண்ட நன்மைகளை பெறலாம் .
        1. தரமான விதக்கரனைகளை பெறலாம் .
         2. தேமல் நோய் தாக்கிய கரணைகளை  ஆரபம்பத்திலேயே  கண்டறிந்து நீக்கலாம்
       3. வயலில்  சரியான செடிகளின் எண்ணிக்கை
       4. ஒருமுறை களை  எடுக்கும் செலவும் . இருமுறை நீர்பாசனம் செய்யும் செலவும் குறையும் .
             ஒரு ஏக்கரில் பயிரிட  16 சதுர மீட்டர்  நாற்றங்கால் போதுமானது.
விதைகரணை  நேர்த்தி :
        விதைக்கரனைகளின்  அடிப்பாகத்தை கார்பண்டாசிம்  என்ற மருந்து 1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் கலந்து 15 நிமிடம் நனைத்து  பின் நடவேண்டும் . ஒரு ஏக்கரில் நடவுசெய்ய 80-120 கிராம் மருந்து தேவைப்படும் .
       வறட்சியை  தாங்கி வளர :
                 மானாவாரியில் பயிரிடப்படும் மரவள்ளி பயிர் வறட்சியை தாங்கி வளர  1 லிட்டர் தண்ணீரில் 5 கிராம் பொட்டாசியம் குளோரைடு  என்ற விகிதத்தில் கலந்த கரைசலில் காரணிகளை சுமார் 20 நிமிடங்கள் நனைத்து பின் நடவேண்டும் .
        அதிக அளவில் கிழங்கு பிடிக்க :
                ஒரு  ஏக்கரில் நடவு செய்ய தேவையான கரணைகளை 30 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம் மற்றும் 30 கிலோ செம்மண்ணை 60 லிட்டர் தண்ணீ ரில் கலந்து அக்குழம்பில் கரணைகளின்  5 செ .மீ . அளவு நனைத்து நடவேண்டும் .
    


ஏக்கருக்கு  தேவையான விதைக்கரணைகள் :

கிளைக்கும் தன்மையுள்ள ரகம்
   மானாவாரி   - இடைவெளி 75*75 செ .மீ.-- 7111 எண்கள்
   இறவை   --    60*60  செ  .மீ.  --  11111 எண்கள்
கிளைக்கும் தன்மை குறைவாக உள்ள ரகம்
 மானாவாரி   - இடைவெளி 90*90 செ .மீ.-- 4938 எண்கள்
   இறவை   --    90*75  செ  .மீ.  --  5925 எண்கள்




Sunday, 20 September 2015

High density planting of Banana :

                      High density planting  with fertigation is suitable for drought condition . Saves  30-40% of water.High density planting is nothing but planting 3 suckers / pit with a spacing of 1.8 *3.6 Mts.
ADVANTAGES:
                  Growth , yield and bunch weight is better. 25% saving in fertiliser and 30-40% saving in water.
Additional  profit within the same area
    வாழை  அடர் நடவு முறை  :                                                                                                    வாழையில் ஒரு  குழிக்கு ஒரு கன்று நடுவது சாதாரண முறை.அடர் நடவு முறை  எ ன்பது  ஒரு குழிக்கு 3 கன்றுகள் நடுவது. குழிகளுக்கு இடையிலான இடைவெளி 1.8மீட்டர் *3.6மீட்டர் .
  நன்மைகள்: 
        * மகசூல்  அதிகரிப்பு
        *களை  எடுப்பதற்கு  மற்றும் பக்க கன்றுகள் அறுப்பதற்கான  கூலி ஆட்கள் தேவை குறைகிறது.
        *நிலம்,நீர் மற்றும் உரம் ஆகிய இடுபொருட்கள் , சூரிய ஒளியும் முழு அளவில் பயன்படுத்தப்படுகிறது.
சில இடர்பாடுகள் :
             * வாழை மகசூல்  வருவதற்கான காலம் அதிகரிப்பு
             * வாசிமுடிகொத்து மற்றும் தண்டு துளைப்பான் எளிதில் பரவும் வாய்ப்பு அதிகம்
             * அதிக ஆரம்ப கால முதலீடு
                ஆனால்  அதிக மகசூல் மற்றும் வருமானம் பெற வாய்ப்புகள் உள்ளதால் இக்குறைகளை  சரியான  அணுகுமுறைகள் மூலம் நிவர்த்தி செய்து பயன்பெறலாம் .



          

Sunday, 30 August 2015

                                   கொய்யா   கவாத்து செய்தல் :
செப்டம்பர், அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் பொதுவாக கவாத்து செய்யவேண்டும். செடிகளின் அடிப்பாகத்தில் அவ்வப்போது தோன்றும் கிளைகளை நீக்க வேண்டும். மேலும் ஒரு பருவத்தில் காய்ப்பு முடிந்தவுடன் வறண்ட மற்றும் உபயோகமில்லாத குச்சிகளை நீக்கிவிடவேண்டும். ஓங்கி உயரமாக வளர்ந்துள்ள கிளைகளை வளைத்து அவற்றின் நுனிப் பாகத்தை மண்ணுக்குள் சுமார் ஒரு அடி ஆழம் வரை பதித்து அவை மேலே கிளர்ந்த வரமல் செய்யவேண்டும். வயதான மற்றும் உற்பத்தித் திறன் இழந்த மரங்களைத் தரை மட்டத்திலிருந்து 75 செஇமீ உயரத்தில் வெட்டிவிடவேண்டும். இதிலிருந்து தழைத்து வரும் புதிய கிளைகளில் பூக்கள் தோன்றி காய்கள் பிடிக்




கும்.
GUAVA   PRUNING  :

                             Guava  trees are  to be pruned twice in a year.  one  during  Sep-Oct  and  again during March. This  is the right time to prune your guava trees .Removing past seasons terminal growth to a length  of  10-15 cms  is necessary to encorage more laterals and thereby  get more number of  good quality fruits.
                            the erect growing branches are to be bent  by  tiening  on to  the begs  driven on the ground. old unproductive but healthy trees can be rejuvenated  by   cutting back to 75 cms from ground level  or  by cutting the secondary branches  at a distance of 75cms  from  their  origin.




Friday, 14 August 2015

 மா  கவாத்து  செய்தல் :

          மா  மரங்களை  ஆகஸ்ட் -- செப்டம்பர்   மாதங்களில்  கவாத்து  செய்யவேண்டும் . மா மரத்தில் தாழ்ந்து  இருக்கும் கிளைகள் , ஒன்றன்மேல் ஒன்றாக  இருக்கும்  கிளைகள்  மற்றும் நோய் தாக்கிய காய்ந்த கிளைகளை  வெட்டி  நீக்கவேண்டும் . கவாத்து  செய்வதால்  சூரிய வெளிச்சம்  மற்றும்  காற்று  உள்ளே  உள்ள  கிளைகளுக்கு   கிடைத்து  மரம்  நன்றாக வளர்ந்து பூ  பூத்து  காய்   பிடிக்கும் .   செப்டம்பர்  மாதத்தில்   6 வருடத்திற்கு  மேற்பட்ட மரங்களுக்கு  மரம் ஒன்றிற்கு  50 கிலோ தொழுஉரம் , 2.200 கிலோ யூரியா  6.200 கிலோ சூப்பர்பாஸ்பேட் ,மற்றும் 2.500 கிலோ பொட்டாக்ஷ்  உரங்களை  அடிமரத்திலிருந்து  சுமார் 90 செ .மீ. தள்ளி வட்டப்பாத்திகளில்  இட்டு பின்  மண்ணால்  மூடி நீர் பாய்ச்ச வேண்டும்





Saturday, 1 August 2015

stacking tomato in terrace garden ;

staking tomato in kitchen garden gives early  harvest and bigger fruits



Saturday, 18 July 2015

வாழைத்தாரை  பிளாஸ்டிக் கவர்மூலம்  மூடுவதால்  பூச்சி , நோய் தாக்குதல் தடுக்கப்படுகிறது. தாரின் எடை மற்றும் தரம்  கூடுகிறது .
  வாழைத்தாரில் கடைசி சீப்பு  தோன்றியதும்  வாழைப்பூவை  அகற்றவேண்டும்  .பெரிய பாலித்தீன்  பையின் அடிப்புறம் வெட்டிவிட்டு  வாழைத்தாரில்  மாட்டி  மேல்புறம்  கட்டிவிடவேண்டும் . அடிப்புறம்  காற்றோட்டத்துடன்  இருக்கவேண்டும் . குளிர் காலங்களில் வெள்ளை கவரையும், கோடைக்கா லங்களில் நீல கவரையும் பயன்படுத்தவேண்டும்





Banana bunch cover :
       chek  your banana plants fruit development.  After opening of last hand  of fruit cutt of the flower. then cover the bunch with polythene bag as below.
   Cut the bottom seam off a large plastic garbage bag with scissors. Choose a clear bag if the bananas areprotected from sunlight by the plant’s leaves. If the fruits are exposed to strong direct sunlight, use an opaque white garbage bag.                                                                                                                                                                                Slide the plastic garbage bag up over all the banana bunches. Gather the end of the bag around the stalk just above the top bunch of fruit. Secure it to the stalk with a piece of string. Leave the bottom of the bag open to allow for air circulation. This also keeps the fruits from overheating inside the plastic covering.                                                                                                                                                                                                                 Leave the protective cover in place until you harvest the final bunch of bananas.                                                     use  opaque  polythene covers  if bunch development is  during winter. use blue color bags during  summer to avoid sun scorch.
             do it within 15 days of last hand opening
          maturity of bunches willbe advanced by 7-10 days. the bunch is free from  pest and disease attackand also physical injuries. bunch quality and weight also improves.





Sunday, 12 July 2015

annual drumsick : 
  seeds  are directly sown. seeds can also be grown in small bags and 35-40 days old seedlings are planted in big containers or in the field. Pinch off the seedlings when they are about 75 cm height to facilitate more branching and thereby more number of fruits canbe harvested.




Sunday, 21 June 2015



முருங்கை இலைச்சாறு   :                                                                                                முருங்கை இலைச்சாறு  சிறந்த பயிர்வளர்ச்சி ஊக்கி.(டானிக் ). சுமார் 250கிராம்  அளவு  முருங்கை இலையுடன்  சிறிது தண்ணீர்  சேர்த்து மிக்ஸ்யில்  அரைத்து  வடிகட்டவும் . இலைச்சாறு  100 மிலியை  1 லிட்டர் நீரில் கலந்து  காய்கறி, உள்ளிட்ட  அனைத்து  தோட்டக்கலை பயிர்களுக்கும்  தெளிக்கலாம் . 25- 30%  மகசூல்  அதிகம் கிடைக்கும் .


Saturday, 20 June 2015

Moringa Leaf Extract  :  Moringa leaves contain a harmone called Zeatine. Fresh moringa leaves





about 250gms canbe taken and grind well in a mixy or juicer with little quantity  of  water. then flitre the extract by using a cloth. 10 % of this  juice  ( 100ml  of juice  diluted in 1 litre of water ) is used to spray on all vegetables, flowers and fruits.  the moringa leaf extract act as a growth harmone and you can get 25-30% increase in yield.